இந்தியாவின் பெருமையாக விளங்கும் சித்தோர்கர் கோட்டை.., எங்கிருக்கிறது?
இந்தியாவில் உள்ள சித்தோர்கர் கோட்டை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் அறிவிக்கப்பட்டது.
சித்தோர்கர் கோட்டை
இந்தியாவின் பெருங்கோட்டைகளில் ஒன்றாக இருக்கும் சித்தோர்கர் கோட்டையானது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.
இந்திய மாநிலமான ராஜஸ்தான், மேவார் பகுதியில் சித்தோர்கர் மாவட்டத்தின் தலைநகரான சித்தோர்கரில் சித்தூர் கோட்டை அமைந்துள்ளது. இது, டெல்லி - மும்பை நெடுஞ்சாலையில் அஜ்மீர் நகரத்திலிருந்து 233 கிமீ தொலைவில் உள்ளது.
மலையில் மேல் இருக்கும் இந்த கோட்டையானது 180 மீட்டர் உயரத்தில், 280 ஹெக்டர் பரப்பளவில், அமைந்துள்ளது. இந்த கோட்டை மேவார் நாட்டின் தலைநகராகவும் விளங்கியது.
இந்த சித்தூர் கோட்டை 7ஆம் நூற்றாண்டு முதல் சூரிய குல ராஜபுத்திர குகிலோத்தி மன்னர்களாலும், சிசோதியா குல மன்னர்களாலும் அக்பர் கைப்பற்றும் வரை ஆளப்பட்டது.
வீரம்
இந்த சித்தூர் கோட்டையானது பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமன் கட்டியதாக கூறப்படுகிறது. இதன் உள்கட்டமைப்பால் சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.
இந்த கோட்டையின் உள்ளே மீரா மற்றும் கும்ப ஷியாம் கோயில் உள்ளது. அதாவது மீரா மற்றும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கவிஞருடன் தொடர்புடையது.
மேலும், இது இந்தியாவின் பல பகுதிகளின் நாட்டுப்புற மற்றும் இலக்கிய மரபுகளோடு தொடர்பு கொண்டது. குறிப்பாக ராஜபுத்திரர்களின் பெருமை, காதல் மற்றும் தைரியத்தின் உருவகமாக சித்தோர்கர் கோட்டை விளங்குகிறது.
படுகொலை
இந்த புகழ்பெற்ற சித்தோர்கர் கோட்டையில் பலதரப்பட்ட போர்கள் நடைபெற்றுள்ளன. அதில், அலாவுதீன் கில்ஜி மற்றும் அரசர் ரத்னசிம்ஹா இடையே நடந்த போரானது வரலாற்றில் நடந்த மிகப்பெரிய போராகும்.
மன்னரின் மனைவியான பத்மினியை அடையும் எண்ணத்தில் டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர், 30,000 இந்துக்களை படுகொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல, கோட்டையில் இருந்த பெண்களும் நெருப்பில் இறங்கி உயிர் தியாகம் செய்தனர். அதன்படி, ராஜபுத்திர ஆண்களும் பெண்களும் செய்த மாபெரும் வீரம் மற்றும் தியாகத்தின் உருவகமாக சித்தோர்கர் கோட்டை இருக்கிறது.
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தின் 5 கோட்டைகளுடன் சித்தூர் கோட்டையும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கே நிறுவனம் 2013 -ம் ஆண்டில் அறிவித்தது.
சுற்றுலா தளம்
சித்தூர் கோட்டையில் அரண்மனைகள், கோயில்கள், கோபுரங்கள், வாயில்கள் அமைந்துள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
குறிப்பாக இந்த கோட்டையில் பார்க்க வேண்டிய முக்கிய இடமாக ராணா கும்ப அரண்மனை, ஃபதே பிரகாஷ் அரண்மனை, பத்மினி அரண்மனை, மீரா கோயில், காளி மாதா கோயில், கௌமுக் நீர்த்தேக்கம், பாஸ்ஸி வனவிலங்கு சரணாலயம், பத்மாவதி அரண்மனை, விஜய் ஸ்தம்பம், சதீஸ் தியோரி கோயில், கீர்த்தி ஸ்தம்பம், ஷ்யாமா கோயில், சன்வாரியாஜி கோயில் ஆகிய இடங்கள் உள்ளது.
பெண்களில் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஜௌஹர் மேளா கொண்டாடப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |