இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எங்கே? உலாவரும் வதந்திகள்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு பொது இடங்களில் எங்கும் தலைகாட்டவில்லை.
ஆகவே, அவர் தொடர்பில் இணையத்தில் வதந்திகள் உலாவரத் துவங்கியுள்ளன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு எங்கே?
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் உச்ச தலைவரான அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக முதலில் வீடியோ ஒன்றில் தோன்றி அற்வித்தவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுதான்.

ஆனால், அதற்குப் பிறகு அவர் பொது இடங்களில் எங்கும் தலைகாட்டவில்லை.
ஆகவே, அவர் ஜேர்மனிக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.
The "Wing of Zion", Netanyahu's prime ministerial plane, took off from Nevatim air base today at 12.10pm
— Matt Kennard (@kennardmatt) February 28, 2026
It flew off the coast of Israel for 4 hours before flying on to Berlin
It landed in the German capital this evening, at 8.30pm pic.twitter.com/gIoK5tJRd2
இன்னொரு படி மேலே போய், ஈரான் தொடர்புடைய சமூக ஊடகங்களில், ஈரான் பதிலடி கொடுத்ததில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
BIG NEWS 🚨🚨
— Times of Iran News (@Timesofiraan) March 1, 2026
If the rumor is truth then Israel's PM Benjamin Netanyahu has been killed by the Iranian Army.
....See more pic.twitter.com/CVJZeYlsq7
இந்நிலையில், அந்த செய்திகள் போலியானவை என நிரூபிக்கும் வகையில், மார்ச் மாதம் 1ஆம் திகதியன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு டெல் அவிவ் நகரில் தன் பாதுகாப்புத்துறை அமைச்சர் முதலானவர்களுடன் கூட்டம் ஒன்றில் பங்கேற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Prime Minister Benjamin Netanyahu today, in a security meeting at the Kirya in Tel Aviv with the Minister of Defense, the IDF Chief of Staff and the Director of the Mossad. pic.twitter.com/g7eHiwFn4P
— Prime Minister of Israel (@IsraeliPM) March 1, 2026
அத்துடன், ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் செய்தியும் காயமடைந்தவர்களுக்கு விரைவில் நலமடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் அறிக்கை ஒன்றும் வெளியாகி, அவர் இஸ்ரேலில் இருப்பதை உறுதி செய்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |