வெறும் 10 ரூபாய்க்கு பிரியாணி விற்கும் முதியவர்.., தமிழகத்தில் எங்கிருக்கிறது?
முதியவர் ஒருவர் 10 ரூபாய்க்கு பிரியாணி, 5 ரூபாய்க்கு பரோட்டா என மலிவு விலையில் உணவு விற்பனை செய்து வருகிறார்.
10 ரூபாய் பிரியாணி
தற்போதைய காலத்தில் அனைவருக்கும் பிடித்த உணவு என்றால் பிரியாணி தான். பல வகையான பிரியாணி உள்ளது. இதன் விலை குறைந்தது ரூ.100ல் தான் தொடங்குகிறது. ஆனால், முதியவர் ஒருவர் வெறும் 10 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்து வருகிறார்.
தமிழக மாவட்டமான விருதுநகர், அருப்புக்கோட்டை வட்டம் முத்துராமலிங்கபுரதத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். முதியவரான இவர் கடந்த 25 ஆண்டுகளாக பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர், தனது கடையில் மலிவான விலையில் உணவுகளை விற்பனை செய்து வருகிறார். அதேபோல இவரது கடையும் பழைய காலத்து கடை போலவே இருக்கிறது.
இவரது கடையில் தேநீர் 5 ரூபாய்க்கும், புரோட்டா 5 ரூபாய்க்கும், இட்லி 5 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. அதாவது காலையில் இட்லி, பூரியை 5 ரூபாய்க்கு விற்று, மதியத்திற்கு பிரியாணியை 10 ரூபாய்க்கும், புரோட்டாவை 5 ரூபாய்க்கும் விற்கிறார்.
விலை குறைவாக இருப்பதால் வேலைக்கு செல்வோர், பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் வருகை இருக்கிறது என்று சுப்புராஜ் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "தனது தந்தையின் காலத்திற்கு பிறகு கடந்த 25 ஆண்டுகளாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். ஆனால், கடையில் அதே விலையில் தான் தற்போது வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரியாணி விலை மட்டும் 5 ரூபாய் என இருந்த நிலையில் தற்போது 10 ரூபாய்க்கு வந்துள்ளது.
வாரம் முழுவதும் வெஜிடபிள் பிரியாணி போடுவேன். புதன் கிழமை ஒருநாள் மட்டும் சிக்கன் சேர்த்து சிக்கன் பிரியாணி போடுவேன்.
இந்த கடையால் எனக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை. காலை மற்றும் மதியத்திற்கு பிறகு கால்நடைகளைக் கவனிக்க செல்வேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |