இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவி சாரா எங்கே?
இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும், ஏராளம் இளம்பெண்களை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்ததால், ராஜ குடும்பத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆண்ட்ரூவுக்காக மன்னர் சார்லஸ் வீடொன்றை ஒதுக்கியுள்ளார். ஆண்ட்ரூ அந்த வீட்டில் விரைவில் குடியேற இருக்கிறார். ஆனால், அவரது முன்னாள் மனைவியான சாராவை எங்கேயும் காணவில்லை!
ஆண்ட்ரூவின் மனைவி சாரா எங்கே?
ஆண்ட்ரூவும் சாராவும் விவாகரத்து செய்த நிலையிலும், இருவரும் ராஜகுடும்பத்துக்கு சொந்தமான ராயல் லாட்ஜ் என்னும் மாளிகையில் இணைந்தே வாழ்ந்துவந்தனர்.

ஆனால், மன்னரின் உத்தரவின்பேரில், சமீபத்தில் இரவோடு இரவாக ஆண்ட்ரூ ராயல் லாட்ஜை விட்டு வெளியேறினார்.
அவருக்காக மன்னர் ஒதுக்கியுள்ள வீட்டில் சாராவுக்கு அனுமதியில்லை. ஆக, சாரா தன் முன்னாள் கணவரான ஆண்ட்ரூ தற்போது தங்கியிருக்கும் வீட்டில் இருப்பதாக தெரியவில்லை.
இதற்கிடையில், ஆண்ட்ரூ சாரா தம்பதியரின் மகள்களில் ஒருவரான இளவரசி யூஜீனியின் வீட்டில் சாரா தங்கக்கூடும் என தகவல்கள் வெளியாகின.
ஆனால், ஆண்ட்ரூ சாரா தொடர்பால், தன் குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் அவமானம் ஏற்படுவதை யூஜீனியின் கணவரான ஜாக் விரும்பவில்லை.

அத்துடன், கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த ஜாக்கின் தொழில் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், ஆண்ட்ரூ, சாரா தொடர்பால், அதை கெடுத்துக்கொள்ளவும் அவர் விரும்பவில்லை.
ஆக, யூஜீனியின் தாயான சாராவை தங்கள் வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்பதில் யூஜீனியின் கணவரான ஜாக் உறுதியாக இருப்பதாக சமீபத்தில் அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சாரா சுவிட்சர்லாந்தின் சூரிக்கிலுள்ள the Paracelsus Recovery Clinic என்னும் கிளினிக்கில் ஜனவரியில் நேரம் செலவிட்டதாக ஒரு தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியில், அயர்லாந்திலுள்ள Ballyliffin Lodge & Spa என்னுமிடத்தில் நேரம் செலவிட்டதாக ஒரு செய்தி வெளியானது.
ஆனால், இப்போது சாரா எங்கிருக்கிறார் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை!