இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா?
இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவலை தெரிந்து கொள்ளலாம்.
கடைசி ரயில் நிலையம்
தினசரி 13,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு 25 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் உலகளவில் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது.
இந்த ரயில்கள் 7,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பயணிக்கின்றன. இது, மொத்தம் 68,000 கிமீ தூரத்தை உள்ளடக்கியது. இருப்பினும், ரயில்கள் ஒருபோதும் நிற்காத தனித்துவமான ரயில் நிலையம் இந்தியாவில் உள்ளது.
இந்தியா-வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள சிங்காபாத் ரயில் நிலையம் இந்தியாவின் கடைசி ரயில் நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையம் இந்திய எல்லையின் இறுதிப் புள்ளியையும் வங்காளதேச எல்லையின் தொடக்கத்தையும் குறிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா மாவட்டத்தில் ஹபீப்பூர் பகுதியில் சிங்காபாத் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
பிரிட்டிஷ் காலத்தில் நிறுவப்பட்ட சிங்காபாத் ரயில் நிலையம், கொல்கத்தா மற்றும் டாக்கா இடையே ஒரு முக்கிய போக்குவரத்து இணைப்பாக செயல்பட்டது.
மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்கள் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு டாக்காவிற்கு பயணத்தின் போது இந்த நிலையத்தை கடந்து சென்றதாக அறியப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று 1971 -ல் வங்கதேசம் நிறுவப்பட்ட பிறகு, சிங்காபாத் ரயில் நிலையத்தின் பங்கு மாற்றப்பட்டது.
1978 -ல், சிங்கபாத்திலிருந்து சரக்கு ரயில் இயக்கங்களை எளிதாக்க ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், 2011 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, சரக்குகளுக்கான முக்கிய போக்குவரத்து புள்ளியாகவும் பிராந்திய வர்த்தகத்தில் அதன் மூலோபாய பங்காகவும் இருந்தது.
இன்று, பயணிகள் ரயில்கள் நிறுத்தப்படாமல், சரக்கு ரயில்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் சில பங்களாதேஷுக்கு இயக்கப்படுகின்றன.
இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற காலத்திலிருந்து மாறாமல் உள்ளது. ஒரு காலத்தில் டார்ஜிலிங் மெயிலின் ஒலிகளால் நிரம்பியிருந்த இந்த ரயில் நிலையம், நடைமேடைகள் வெறிச்சோடி, டிக்கெட் கவுன்டர்கள் மூடப்பட்டு காணப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |