உலகின் மிகப் பெரிய கடிகாரம் எங்கு உள்ளது? இதன் சிறப்பு என்ன?
சவூதி அரேபியாவிலுள்ள அல்ப்ராஜ் அல் பெயிட் (Abraj Al-Bait) என்ற கடிகாரம் தான் உலகின் மிகப்பெரிய கடிகாரம்.
இக்கடிகாரம் கடந்த 2012ல் திறக்கப்பட்டது.
7 வானளாவிய ஹாட்டல்களைக் கொண்டுள்ள இந்தப் பாரிய கட்டடத்தின் மையத்திலேயே இதை நீங்கள் காணமுடியும். இந்தக் கடிகாரத்தின் முகந்தான் உலகின் மிகப் பெரியது என்கிறார்கள். இது மட்டுமல்ல உலகின் மூன்றாவது உயரமான கட்டடமும் இதுதான்.
கடிகாரத்தின் குறுக்கு வெட்டு அளவு நம்மை ஆச்சரியப்படுத்தும். 43மீற்றர்(141அடி) தான் இதன் குறுக்கு வெட்டளவு. இரண்டு மில்லியன் LED மின்விளக்குகள் இந்த முகத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. இநதக் கடிகாரத்தின் உயரம் 600மீற்றர். (1972அடி)
120மாடிகள் கொண்ட ஒரு குடிமனை போல் இருக்கும் இக் கட்டடத்தின் பெயர், ''மக்கா கிளாக் டவர் ராயல் ஓட்டல்' என்பதே .
''மக்கா கிளாக் டவர் ராயல் ஓட்டல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டலைச் சுற்றி, ஏழு உயரமான கட்டடங்கள் உள்ளன. லண்டன் பிக்பென் கடிகாரத்தை விட 4.7 மடங்கு பெரிய கடிகாரம், இந்த கட்டடத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ளது.
உலகில் மிக அதிகமாக பணம் செலவிடப்பட்டு கட்டப்பட்ட கட்டடம் என்ற பெயரை இது பெற்றுள்ளது. மொத்தம் 15 பில்லியன் டாலர் தொகை விழுங்கப்பட்டுள்ளது. மெக்கா பள்ளிவாசல்தான் மிக அதிக பணத்தைச் செலவிட்டு கட்டப்பட்டது என்ற வரிசையில் முதலிடத்தில் நிற்கின்றது. (18ஆம் நுாற்றாண்டு காலத்து ஒட்டோமன் காலத்துக் கோட்டையொன்றை நிர்மூலமாக்கி, பல உலக நாடுகளின் எதிர்ப்புகளிடையே , இதன் மீது பள்ளிவாசலை எழுப்பினார்கள்)
புனித நகரமான மக்காவில் மிகவும் ஆடம்பர, அதிக கட்டணம் கொண்ட ஓட்டல் இதுதான். இந்த ஓட்டலில், 1005 அறைகள் உள்ளன. அதில் தங்கி இருப்பவர்கள் பயணிக்க, 76 லிப்ட்கள் உள்ளன.
ஜெர்மனியில் தயாரான இந்த கடிகாரம் 147 அடி அகலம், 141 அடி உயரம் கொண்டது. கட்டடத்தின் நான்கு பக்கங்களிலும், இந்த கடிகாரம் இருக்கும். "ஹஜ்' நேரத்தில் மட்டும் மக்காவிற்கு 40 லட்சம் பேர் வரையில் வருகின்றனர்; மற்றைய மாதங்களில் பல லட்சம் பேர் வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022