அரண்மனையிலா.. கடற்கரையிலா! வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் எங்கு நடக்கிறது?
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் நடைபெறும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகையும்,சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமார், அவரது நீண்ட நாள் நண்பரான மும்பையைச் சேர்ந்த நிக்கோலாய்க்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது.
இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார்.
ஆனால், நிக்கோலாயின் முதல் திருமணத்தை பற்றியும், அவரது தோற்றத்தை குறித்தும் சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்களுக்கு மெச்சூரிட்டியான பதிலை கொடுத்தவர் வரலட்சுமி.
திருமணம் எங்கு நடக்கிறது?
தற்போது இவர்களின் திருமண திகதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வெளிவந்த தகவலின் படி இவர்களின் திருமணமானது ஜூலை மாதம் இரண்டாம் திகதி நடைபெறவிருக்கிறது.
இவர்களின் திருமணத்தை தாய்லாந்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்களாம். அதாவது, அங்குள்ள கடற்கரைகள், அரண்மனைகள் மற்றும் தாய்லாந்து உணவுகள் காதலர்களை ஈர்த்துள்ளதாக கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், அங்கு திருமணத்தை வைத்தால் பொருளாதாரா ரீதியாக ஏற்படும் செலவுகளும் குறைவு தான். இதனிடையே, திருமண ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்று பேசுகின்றனர்.
இரு வீட்டார்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தான் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
ஆனால், இதற்கு முன்னதாக மெகந்தி நிகழ்ச்சி சென்னையில் தாஜ் நட்சத்திர ஹொட்டலிலும், வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள லீலா பேலஸிலும் நடைபெறுகிறதாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |