வீட்டுக்கொரு விமானம் வைத்திருக்கும் மக்கள்: எங்கு தெரியுமா?
அமெரிக்காவில் இருக்கும் இந்த சிறிய நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் சொந்தமாக தனி விமானம் இருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரான் ஏர்பார்க் (Cameron Airpark) என்ற சிறிய கிராமத்தில் அலுவலகத்திற்குச் செல்ல ஒவ்வொரு வீட்டிலும் விமானத்தை வைத்துள்ளனர்.
விமான ஓட்டிகளுக்கான அனுமதி பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்களை தவிர, வேறு எவருக்கும் விமானத்தை இயக்க அதிகாரம் இல்லை.
கேமரான் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் விமானங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தொழில்ரீதியாக அல்லது ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளாக இருக்கின்றனர்.
இங்கு வசிக்கும் அனைவரும் தாங்கள் சொந்தமாக விமானங்களை வைத்திருப்பதை விரும்புகிறார்கள்.
கமரூன் ஏர்பார்க் கடந்த 1963-ல் கட்டப்பட்டது. இங்கே மொத்தம் 124 வீடுகள் உள்ளன.
விமானங்களை வீடுகளுக்கு முன்பாக நிறுத்துவதற்கு வசதியாக இங்கு 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்தது.
இந்நிலையில் தான், விமான நிலையங்களை ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமானப் பூங்காவாக மேம்படுத்த அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
அதன் விளைவாகத்தான் காமரூன் ஏர்பார்க் நகரத்தில் வீட்டுக்கு ஒரு விமானம் நிற்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |