5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதர்கள் வாழ்ந்த தமிழக இடம்.., எது தெரியுமா?
இந்தியா மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்ட நாடாகும்.
உலகின் முதல் ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆதி மனிதர்களின் வாழ்க்கை முறையை அறிய உதவும் பல முக்கிய இடங்கள் இந்தியாவில் உள்ளன.

இவை வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்களின் பயணத்தைப் பற்றி முக்கிய தகவல்களை வழங்குகின்றன.
அந்தவகையில், 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதர்கள் வாழ்ந்த தமிழக இடம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
சென்னைக்கு அருகில் கொற்றலை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அத்திரம்பாக்கம், இந்தியாவின் மிகப் பழமையான தொல்லியல் தளங்களில் ஒன்றாகும்.
இவை சுமார் 3,85,000 முதல் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய கற்கால மனிதர்களின் வாழ்விடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இங்கு கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த கருவிகள் ஹோமோ எரக்டஸ் எனப்படும் ஆதி மனித இனத்துடன் தொடர்புடையவை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும், கைக்கோடாரிகள் மற்றும் வெட்டுக்கருவிகள் போன்ற அச்சூலியன் வகை கருவிகளும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |