பள்ளிகளை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதா?: சுவிட்சர்லாந்தில் நிலவும் மாறுபட்ட கருத்துக்கள்
சுவிட்சர்லாந்தில், பள்ளிகளை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதா என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
க்கத்து நாடுகளான ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தாங்களும் பள்ளிகளை மூடுவதா அல்லது தொடர்ந்து நடத்துவதா என்பதில் சுவிட்சர்லாந்தில் இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
ஆரம்பப் பள்ளியில் பயிலும் இளம் மாணவர்களைப் பொருத்தவரையில் அவர்களுக்கு தற்போதைக்கு பிரச்சினை இல்லை என்றும், தாழ்ந்த வாழ்க்கைத்தரத்தில் உள்ள பிள்ளைகளைப் பொருத்தவரை, பள்ளிகளை மூடுவது அவர்களை பாதிக்கும் என்பதும்தான் சுவிட்சர்லாந்தில் தற்போது நிலவும் கருத்து.
ஆனால், புதிய திடீர்மாற்றம் பெற்ற வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் சுவிட்சர்லாந்து பகுதி பொது முடக்கத்திற்குள் செல்ல இருப்பதால் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொற்றுநோயியல் நிபுணரான Marcel Tanner, மூத்த மாணவர்கள் மீண்டும் வீடுகளிலிருந்தவண்ணம் ஒன்லைன் கல்வியைத் தொடரவேண்டும் என்று கூறுகிறார். அதே நேரத்தில், ஆரம்பப் பள்ளிகளைஇப்போதைக்கு மூடத்தேவையில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.
கல்வியியல் நிபுணரான Stefan Wolter என்பவரும் பள்ளிகளை மூடுவதற்கு எதிராகவே கருத்து தெரிவித்துள்ளார்.
பள்ளிகளை மூடுவது கல்வி மற்றும் மனோரீதியாக பிள்ளைகளை பாதிக்கும் என்கிறார் அவர்.
ஆகவே, நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு, மூத்த மாணவர்கள் மீண்டும் வீடுகளிலிருந்தவண்ணம் ஒன்லைன் கல்வியைத் தொடர்வதா அல்லது கட்டுப்பாடுகளைஅதிகரித்து பள்ளிகளைத் திறப்பதா என அரசு ஆலோசித்து வருகிறது.