குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்?
அம்பானியின் திருமணத்தில் பணியாளராக வேலை செய்து வெறும் ரூ.50 சம்பாதித்த நடிகையின் பாதையை காணலாம்.
யார் அந்த நடிகை?
நடிகை ராக்கி சாவந்தின் வாழ்க்கை பயணம் மிகவும் கடினமாக இருந்தும் அவர் தனது கனவுகளை கைவிடாமல் போராடினார்.
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையில் உள்ள ஏழை குடும்பத்தில் பிறந்த ராக்கி சாவந்த் 10 வயதிலேயே வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.
அவரது முதல் வேலை என்னவென்றால் டினா மற்றும் அனில் அம்பானியின் திருமணத்தில் உணவு பரிமாறியது தான். அங்கு அவர் ஒரு நாளைக்கு ரூ.50 மட்டுமே சம்பாதித்தார்.

தண்டனை காலத்திற்கும் அதிகமாக 4.7 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சில நாட்கள் சாப்பிட எதுவும் இல்லாமல், குப்பையில் இருந்து எஞ்சியவற்றை சாப்பிட்டார் ராக்கி சாவந்த். இதில், அவருடைய குடும்பத்தினர் அவரை நடனமாட அனுமதிக்கவில்லை. ஒ
ருமுறை அவர் தாண்டியா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பிய போது அவருடைய தாயார் அவரது நீளமான முடியை வெட்டினார்.
இதையடுத்து, 1997 ஆம் ஆண்டு அக்னிசக்ரா திரைப்படத்தின் மூலம் படங்களில் அறிமுகமானார் ராக்கி சாவந்த். இதில் அவருக்கு முன்னணி வேடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் தனது நடனப் பாடல்களுக்காக பிரபலமானார்.
ஷாருக்கானுடன் நடித்த பர்தேசியா, தேக்தா ஹை து க்யா மற்றும் மைன் ஹூன் நா போன்ற பாடல்கள் அவரை பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டான்சர்களில் ஒருவராக ஆக்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |