32 படங்களில் நடித்தவர்.., 15 வயதில் சினிமாவை விட்டு வெளியேறி ஐஏஎஸ் அதிகாரியான நடிகை யார்?
சினிமாவை விட்டு வெளியேறி ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய நடிகையை பற்றியும், அவர் கடந்து வந்த பாதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
யார் அவர்?
தற்போதைய காலத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பலரும் படிப்பை நிறுத்திவிட்டு வருகின்றனர். ஆனால், நடிகை ஒருவர் தனது கனவை நிறைவேற்றுவதற்காக 15 வயதில் சினிமாவை விட்டு வெளியேறியுள்ளார்.
இவர் 48 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ள நிலையில் தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக மாறி சேவை செய்து வருகிறார். இவரின் பெயர் கீர்த்தனா. முன்னாள் குழந்தை நடிகையான இவர் கங்கா யமுனா, கர்பூரதா கோம்பே, கானூரு ஹெக்கடிதி, சர்க்கிள் இன்ஸ்பெக்டர், முத்தின அலியா உள்ளிட்ட பல்வேறு கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இதனை தவிர தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மொத்தமாக 32 படங்களில் நடித்துள்ளார். இதன்பிறகு யு.பி.எஸ்.சி தேர்வில் படிப்பதற்காக சினிமாவை விட்டு வெளியேறினார்.
ஆனால் இவர் யு.பி.எஸ்.சி தேர்வை எழுதுவதற்கு முன்பாக கர்நாடக மாநில நிர்வாக சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் அரசு பணியாற்றினார். இதையடுத்து அவரது கவனம் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வை நோக்கி சென்றது.
ஆனால், யு.பி.எஸ்.சி தேர்வில் ஐந்து முறை தோல்வியடைந்தாலும் அடுத்த முயற்சியை நோக்கி நகர்ந்தார். பின்னர் , 2020-ம் ஆண்டில் 6-வது முயற்சியில் யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று AIR 167-வது இடத்தை பிடித்தார்.
பின்னர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மண்டியாவில் உதவி ஆணையராக தனது முதல் பதவியைப் பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |