ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை வேண்டாம் என மறுத்த தமிழ் நடிகை.., யார் தெரியுமா?
அண்மைகாலமாக பிரபலங்களிடையே விவாகரத்து சம்பவங்கள் பிரபலமாக வருகிறது.
அண்மையில் கிரிக்கெட்டர் யுவேந்திர சாஹல் - தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்தி வெளியாகி கவனம் பெற்றது.
இதில் தனஸ்ரீ வர்மா ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் நடிகை ஒருவர் தனக்கு வந்த ரூ.200 கோடி ஜீவனாம்சத் தொகையை வாங்க மறுத்துள்ளார்.
மேலும் அந்தக் குடும்பத்திலிருந்து தனக்கு ஒரு பைசா கூட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
அந்த நடிகை சமந்தா தான் அவர். நடிகை சமந்தாவுக்கும் - நாக சைதன்யாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் தகவலின் படி நடிகை சமந்தாவுக்கு நாக சைதன்யா குடும்பத்தின் தரப்பிலிருந்து ரூ.200 கோடி ஜீவனாம்சம் கொடுத்ததாகவும், ஆனால் அதை வாங்க அவர் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |