வாழ்நாள் முழுவதும் ஒருமுறை கூட தூங்காத உயிரினம்.., எது தெரியுமா?
மனிதனுக்கு பிரதான ஓய்வு என்றால் அது உறக்கம் தான்.
உறக்கமின்மை காரணமாக உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உறங்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் ஒரு உயிரினம் தன் வாழ்நாள் முழுவதும் ஒருமுறை கூட உறங்காது என்பது ஆச்சரியமான விடயம் தான்.
அந்தவகையில், வாழ்நாள் முழுவதும் தூங்காத உயிரினம் எறும்பு தான்.
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் எரும்புகள் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட உறங்காதாது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எறும்பு போல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று கூறி நாம் கேள்வி பட்டிருப்போம்.
இந்நிலையில், ஒரு முறை கூட உறங்காமல் எறும்புகளால் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.
எறும்புகள் ஒரு நாளைக்கு சுமார் 250 முறை ஓய்வெடுப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படிதான் அவற்றுக்கு நாள் முழுவதும் இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கிறது.
எறும்புகள் டைனோசர்களைப் போலவே பழமையானவை. அவை சுமார் 2,00,000 லட்சம் ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்கின்றன.
மேலும், எறும்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள பெரோமோன் ரசாயனங்களை பயன்படுத்துகின்றன.
உணவு குறித்து தகவல் தெரிவிப்பது, ஆபத்தை கண்டால் எச்சரிப்பது உள்ளிட்ட தகவல்களை இதன் மூலம் அவை தெரியப்படுத்துகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |