முட்டையிட்டு பால் கொடுக்கும் ஒரே விலங்கு: எது தெரியுமா?
பொதுவாக குட்டிகளை ஈனுகின்ற விலங்குகள் தான் பாலூட்டியாக இருக்கும்.
முட்டையிட்டு குஞ்சிபொரிக்கும் விலங்குகள் அனைத்தும் பாலூட்டிகளாக இருப்பாகற்கான வாய்ப்புகள் இல்லை.
அந்தவகையில், முட்டையும் இட்டு, பாலூட்டியாகவும் இருக்கின்ற ஒரு விலங்கு பற்றி தெரியுமா?
முட்டையிட்டு பால் கொடுக்கும் விலங்கு பிளாட்டிபஸ் மற்றும் எச்சிட்னா.
பிளாட்டிபஸ் மற்றும் எச்சிட்னா இரண்டும் பாலூட்டி வகைகளை சார்ந்தது. ஆனால் இந்த விலங்குகள் சந்ததிகளை உருவாக்க முட்டையிடுகின்றன.
ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற பிளாட்டிபஸ் முட்டையிட்டு குழந்தைகளை பெற்றெடுத்து பாலூட்டுகின்றன.
ஆனால் இந்த விலங்குகிற்கு பாலூட்டிகளை போல பற்கள் இல்லை. ஆதலால் நீருக்கடியில் உள்ள பாறைகளை வாய்க்குள் போட்டு அதை பற்களாக பயன்படுத்துகின்றன.
குறிப்பாக இந்த விலங்குகள் மனிதர்களால் வளர்க்கப்படவில்லை.
இதேபோல், முள்ளம்பன்றியைப் போன்ற தோற்றம் கொண்ட எச்சிட்னாவும் பால் மற்றும் முட்டை இரண்டையும் கொடுக்கும் விலங்காகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |