உலகிலேயே நீண்ட கர்ப்ப காலம் கொண்ட விலங்கு.., எது தெரியுமா?
கர்ப்ப காலம் என்பது விலங்குகளுக்கு ஏற்ப மாறுபடும், சில விலங்குகள் கருவை வளர்க்க மிகவும் நீண்ட காலம் எடுத்துக்கொள்கின்றன.
அந்தவகையில், நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் மிக நீண்ட கர்ப்ப காலம் கொண்டது யானை.
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும்.
இது நிலத்தில் வாழும் விலங்குகள் அனைத்தைவிடும் மிகப் பெரியதாகும். இவர் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியதாகும்.
அதிக ஞாபக சக்தி கொண்ட விலங்கான யானைகள் எப்போதும் குடும்பமாக வாழும்.
யானைகளில் மூன்று சிற்றினங்கள் மட்டுமே உலகில் இருக்கின்றன, அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் ஆகும்.
யானைக் குட்டியின் எடை இனம் வாரியாக மாறுபடும், குறிப்பாக ஆப்பிரிக்க யானைக் குட்டிகள் பொதுவாக பெரியதாக இருக்கும்.
அந்தவகையில், புதிதாகப் பிறந்த யானைக்குட்டியின் சராசரி எடை சுமார் 115 கிலோ.
இந்நிலையில், மிக நீண்ட கர்ப்ப காலம் கொண்ட விலங்கான யானையின் கர்ப்ப காலம் சுமார் 22 மாதங்கள் நீடிக்கும்.
யானைகள் உலகின் மிகப்பெரிய உயிருள்ள மற்றும் மிகப்பெரிய மூளை கொண்ட நில விலங்குகள் என்பதால், இதன் வளர்ச்சிக்கு நீண்ட காலம் எடுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |