இறைச்சியை உணவாக உண்ணும் தாவரங்கள்.., எது எது தெரியுமா?
பொதுவாக தாவரங்கள் சூரிய ஒளி, நீர், மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு செழிப்பாக வளர்க்கின்றனர்.
ஆனால், சில தாவரங்கள் பூச்சிகள், சிறிய விலங்குகளைப் பிடித்து உண்ணும் தன்மை கொண்டவை. இவை இறைச்சி உண்ணும் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சில தாவரங்கள் மண்ணிலிருந்து மிகவும் குறைவான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதால் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற பூச்சிகள், சிறிய விலங்குகளைப் பிடித்து உண்ணுகின்றன.
இதன் மூலமாக அவை தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களைப் பெற்று வாழத் தொடங்கின.
அந்தவகையில், எந்தெந்த தாவரங்கள் இறைச்சி உண்ணுகின்றன என்று பார்ப்போம்.
Venus Flytrap
இந்த தாவரத்தின் இலைகள் இரண்டு பக்கங்களாக பிரிந்திருக்கும். இதன் இலைகளின் விளிம்பில் சிறிய முடிகள் இருக்கும்.
ஒரு பூச்சி இந்த இலைகளின் நடுவில் அமர்ந்தால், உடனடியாக அவை மூடிக்கொண்டு, பூச்சியை பிடித்துக்கொள்ளும்.
Sundew
இதன் இலைகள் வட்ட வடிவத்தில் இருக்கும். இலை முழுவதும் ஒட்டும் தன்மை கொண்ட சிறிய முடிகள் இருக்கும்.
பூச்சிகள் இவற்றை உண்ண முயற்சித்து அந்த திரவத்தில் ஒட்டிக்கொள்ளும்போது, இலைகள் மெதுவாக மூடிக்கொள்ளும்.
Pitcher Plants
பார்ப்பதற்கு குடம் போல இருக்கும் இந்த தாவரத்தின் இலைகளில் நீர் நிரம்பி இருக்கும்.
இதிலிருந்து வெளிவரும் வாசனை பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அதன் உள்ளே விழுந்து வெளியேற முடியாமல் பூச்சிகள் இறந்துவிடும்.
Bladderworts
நீர் வாழ் தாவரங்களான இவை தங்களின் வேர்களில் சிறிய பந்து வடிவ பொறிகளைக் கொண்டிருக்கும்.
இந்த பொறிகள் நீரில் வாழும் சிறிய உயிரினங்களை உள்ளே இழுத்துக்கொண்டு உணவாக மாற்றிக்கொள்ளும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |