பறவைகளின் அரசன் என்று அழைக்கப்படும் பறவை.., எது தெரியுமா?
which bird is called as the king of birds- உலகில் 11,000க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன.
ஒவ்வொரு பறவைக்கும் தனித்துவமான சிறப்புகள் உள்ளன. அந்த வகையில், பறவைகளின் அரசன் என்று அழைக்கப்படும் பறவை எது என்பது குறித்து பார்க்கலாம்.
அதன்படி, உலகில் உள்ள பார்வைகளுக்கெல்லாம் அரசன் என்று அழைக்கப்படும் பறவை கழுகு.

கழுகு தனது வலிமை, கூர்மையான பார்வை மற்றும் வேட்டையாடும் திறன் ஆகியவற்றால் மற்ற பறவைகளிலிருந்து தனித்து விளங்குகிறது.
மேலும், பல்வேறு கலாச்சாரங்களில் கழுகு வலிமை மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
ஹார்பி கழுகு, ஸ்டெல்லர் கடல் கழுகு போன்ற சில வகை கழுகுகளின் இறக்கைகள் சுமார் 8 அடி வரை விரியும்.

கழுகுகளின் பார்வைத்திறன் மனிதர்களைவிட பல மடங்கு அதிகம். உயரத்தில் பறக்கும்போதும் தரையில் இருக்கும் சிறிய அசைவுகளைக் கண்டறிய முடியும்.
கழுகுகளுக்கு வளைந்த, கூர்மையான அலகும் வலிமையான நகங்களும் உள்ளன. இவை இரையைப் பிடிக்கவும், அதை வேட்டையாடவும் உதவுகின்றன.
இதனால் கழுகுகள் சிறந்த வேட்டையாடும் பறவைகளாக விளங்குகின்றன.

கழுகுகள் உணவுச் சங்கிலியில் முக்கிய இடம் வகிக்கின்றன. அவை மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
கழுகுகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் குறித்த தகவல்களை அளிக்கக்கூடும்.
அதன் கம்பீரமான தோற்றமும் தனித்துவமான திறன்களும் அதனைப் பறவைகளின் அரசன் என்று அழைக்கக் காரணமாக உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |