மும்பை இந்தியன்ஸ் முதல் ரிலையன்ஸ் வரை! நீடா அம்பானியின் கைவசம் இருக்கும் பிசினஸ்
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் பங்களிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை (Reliance Trust)
2010-ம் ஆண்டு நிறுவப்பட்ட ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவராக நீடா அம்பானி உள்ளார்.
இவரது தலைமையின் கீழ் இந்த அறக்கட்டளையானது 56.5 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
இது, கிராமப்புற மாற்றம், சுகாதாரம், கல்வி, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை, கலை, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians)
மும்பை இந்தியன்ஸ் IPL அணியின் இணை உரிமையாளராக நீடா அம்பானி உள்ளார். இவர் இந்த அணியை மிகப்பெரிய பிராஞ்சைஸாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறார்.
பல கோப்பைகளை இந்த அணி வென்றுள்ளது. நீடா அம்பானியின் தலைமையானது இந்த அணிக்கு ஊக்கமாக உள்ளது.
Her Circle
டிஜிட்டல் தளமான "ஹெர் சர்க்கிளை நீடா அம்பானி நிறுவினார். இந்த தளமானது இந்தியா முழுவதும் உள்ள பெண்களை மேம்படுத்தவும், இணைக்கவும், ஊக்கப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக பெண்களின் வளர்ச்சிக்கு இந்த தளம் உதவுகிறது.
ஜியோ வேர்ல்ட் சென்டர் (Jio World Center)
சுமார் 8.5 ஏக்கர் பரப்பளவில் ஜியோ வேர்ல்ட் சென்டர் மற்றும் நீடா முகேஷ் அம்பானி கல்ச்சுரல் சென்டரை நிறுவியுள்ளனர். இது கலை, கலாச்சாரம் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான மையமாக உள்ளது.
திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல்
சர்வதேச பள்ளியின் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனராகவும், தலைவராகவும் நீடா அம்பானி இருக்கிறார்.
ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் லிமிடெட்
விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் லிமிடெட் (Football Sports Development Limited) -யை நீடா அம்பானி நிறுவினார். இது இந்தியா முழுவதும் உள்ள கால்பந்து வீரர்களுக்கு சிறந்த இடமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |