கனேடியர்கள் யாரெல்லாம் ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை போடக்கூடாது! வெளியான முக்கிய தகவல்
ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை யாரெல்லாம் போடக்கூடாது என்பது குறித்து கனடாவின் தேசிய ஆலோசனைக்கு குழு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கனடாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நாடு முழுவதும் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கனேடியர்களுக்கு ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா-வின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிந்துரைக்கவில்லை என்று நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசிஐ) தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்த வரையறுக்கப்பட்ட தகவல்களால் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த NACI பரிந்துரைக்கவில்லை என்று ஆலோசனைக் குழு தனது சமீபத்திய பரிந்துரைகள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Pfizer-BioNTech மற்றும் Moderna-வை தொடர்ந்து இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியதாக கனடா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அஸ்டிராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸ்கள் புதன்கிழமைக்கு முன்பே வரக்கூடும் என கனடா நம்பிக்கை தெரிவித்துள்ளது.