இந்தியாவில் தங்கத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா?
which city is called as the gold capital of india- பொதுவாக தங்க நகைகளை அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.
சமீப காலமாக, தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில், பலரும் நகை வாங்க முடியாத சிரமத்தில் இருக்கின்றனர்.
அந்தவகையில், இந்தியாவில் தங்கத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் தங்க நகை உற்பத்தி மற்றும் விற்பனைக்கு முக்கிய மையமாக கேரளாவின் திருச்சூர் விளங்குகிறது.
இதனால், திருச்சூர் இந்தியாவின் தங்கத் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
திருச்சூரில் ஏராளமான தங்க நகை உற்பத்தி நிறுவனங்கள், பட்டறைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளன.
இங்கு பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகளில் தங்க நகைகள் தயாரிக்கப்படுகின்றன.
திருச்சூர் கேரளாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் மற்றும் வலுவான வர்த்தகக் கட்டமைப்பு தங்க நகை வியாபாரத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

பாரம்பரிய பொற்கொல்லர்களின் கைவினைத்திறன் காரணமாக, திருச்சூர் நீண்ட காலமாக தங்க நகை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
20ஆம் நூற்றாண்டில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தகக் கட்டமைப்புகள் வளர்ந்ததால், தங்கத் துறையில் அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது.
தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், தங்க நகைகளின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக திருச்சூரைச் சார்ந்துள்ளன.
திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்குத் தேவையான பாரம்பரிய மற்றும் நவீன நகைகளும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் தங்க நகைகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், திருச்சூர் போன்ற நகரங்கள் நகை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதன் காரணமாகவே திருச்சூர் இந்தியாவின் முக்கிய தங்க நகை வர்த்தக மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |