இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் அதிசய நகரம்.., எது தெரியுமா?
இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்துவமான பெயர்களும், சிறப்புகளும் உள்ளன.
அந்த வகையில் ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெய்சல்மர் நகரம் இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படுகிறது.
ஜெய்சல்மர் நகரில் உள்ள பெரும்பாலான வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் மஞ்சள் நிற மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளன.

சூரிய ஒளி இந்தக் கட்டிடங்கள் மீது படும்போது, அவை தங்க நிறத்தில் ஜொலிப்பது போல் காட்சியளிக்கின்ற காரணமாகவே ஜெய்சல்மருக்கு தங்க நகரம் என்ற பெயர் வந்தது.
ஜெய்சல்மரின் முக்கிய அடையாளமாக இருப்பது ஜெய்சல்மர் கோட்டை. இது சோனார் கிலா அல்லது தங்கக் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
கி.பி. 1156ஆம் ஆண்டு ராஜபுத்திர மன்னர் ராவல் ஜெய்சால் இந்தக் கோட்டையை கட்டினார். அப்போது இது அவரது ராஜ்ஜியத்தின் முக்கிய மையமாக இருந்தது.

இந்தக் கோட்டையின் மற்றொரு சிறப்பு, இது வெறும் வரலாற்றுச் சின்னமாக மட்டும் இல்லாமல் இன்றும் மக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பதுதான்.
பழங்காலத்தில் ஜெய்சல்மர் முக்கியமான வணிக நகரமாகவும் இருந்தது.
இந்தியாவையும் மேற்கத்திய பகுதிகளையும் இணைக்கும் முக்கிய வணிகப் பாதைகளுக்கு அருகில் இந்த நகரம் அமைந்திருந்ததால், ஏராளமான வணிகர்கள் இங்கு வந்து சென்றனர்.

இதன் மூலம் ஜெய்சல்மர் வணிகம் மட்டுமின்றி, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியது.
இன்றும் ஜெய்சல்மர் தனது பழமையான கட்டிடங்கள், நாட்டுப்புற இசை, கைவினைப் பொருட்கள், திருவிழாக்கள் மற்றும் பாலைவன வாழ்க்கை முறைக்காக பிரபலமாக உள்ளது.
அதன் தங்க நிறக் கட்டிடங்களும் வரலாற்றுச் சிறப்புகளும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |