இந்தியாவின் உருளைக்கிழங்கு தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம்.., எது தெரியுமா?
which city is known as the Potato Capital of India- ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகின்றன.

இருப்பினும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா, இந்தியாவின் உருளைக்கிழங்கு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
விவசாய துறையில் ஆக்ரா முக்கிய இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, உருளைக்கிழங்கு உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகத்தில் முக்கிய மையமாகத் திகழ்கிறது.
ஆக்ரா பகுதியில் உருளைக்கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற வளமான வண்டல் மண் காணப்படுகிறது.

மேலும், இங்குள்ள குளிர்ச்சியான காலநிலையும், மிதமான வெப்பநிலையும் உருளைக்கிழங்கு வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளன.
இதுமட்டுமின்றி, பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடியில் அனுபவம் பெற்றுள்ளனர்.
ஆக்ராவில் அதிக அளவிலான குளிர்பதன கிடங்குகள், விவசாய சந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளன. இதன் மூலம் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடிகிறது.

மேலும், இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் அதிக அளவில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது.
இங்குள்ள வளமான நிலப்பரப்பு, நீர்ப்பாசன வசதிகள் மற்றும் சாதகமான காலநிலை ஆகியவை அதிக உற்பத்திக்கு உதவுகின்றன.
குறிப்பாக, மேற்கு மற்றும் மத்திய உத்தரப் பிரதேசப் பகுதிகள் உருளைக்கிழங்கு சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |