டெல்லிக்கு முன் இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம்.., எது தெரியுமா?
Which city was the capital of India before Delhi- இந்தியாவின் தலைநகராக தற்போது டெல்லி உள்ளது.
அந்தவகையில், டெல்லிக்கு முன் இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா இருந்தது.
1772ஆம் ஆண்டு முதல் 1911ஆம் ஆண்டு வரை சுமார் 139 ஆண்டுகள் கொல்கத்தா பிரிட்டிஷ் இந்தியாவின் நிர்வாக மையமாகத் திகழ்ந்தது.
1772ஆம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சிக் காலத்தில் கொல்கத்தா பிரிட்டிஷ் நிர்வாகத்தின் முக்கிய மையமாக மாறியது.
அப்போது முக்கியமான நிர்வாக அலுவலகங்கள் முர்ஷிதாபாத்திலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டன.
இதன் மூலம் கொல்கத்தா பிரிட்டிஷ் ஆட்சியின் முக்கிய நகரமாக வளர்ந்தது.
கொல்கத்தாவின் ஆரம்பகால வரலாறு சுதானுதி, கோவிந்தபூர், கலிகட்டா ஆகிய மூன்று கிராமங்களுடன் தொடர்புடையது.

இவற்றில் ஒன்றான கலிகட்டா என்ற பெயரிலிருந்தே கல்கத்தா என்ற பெயர் உருவானதாகக் கூறப்படுகிறது.
2001ஆம் ஆண்டு இதன் அதிகாரப்பூர்வ ஆங்கிலப் பெயர் கல்கத்தாவிலிருந்து கொல்கத்தா என மாற்றப்பட்டது.
1911ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற டெல்லி தர்பார் நிகழ்வில், இந்தியாவின் தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றுவதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.

இந்த முடிவு இந்தியாவின் நிர்வாக வரலாற்றில் முக்கியமான மாற்றமாக அமைந்தது. பின்னர் டெல்லியில் புதுடெல்லி உருவாக்கப்பட்டு, இந்தியாவின் தலைநகராக வளர்ச்சியடைந்தது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா, பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்காலத் தலைநகராகச் செயல்பட்டது.
அங்கு நிலவிய குளிர்ச்சியான காலநிலை காரணமாக, ஆங்கிலேய அதிகாரிகள் கோடைக்காலத்தில் சிம்லாவிலிருந்து நிர்வாகபணிகளை மேற்கொண்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |