இப்படியும் விருந்தா..!விருந்தினர்களுக்கு பூச்சிகளை உணவாக வழங்கும் முக்கிய 5 நாடுகள்
பூச்சுகளை சமைத்து சாப்பிடுவதோடு அதை விருந்தினர்களுக்கு சிறப்பு விருந்தாக அளிக்கும் முக்கிய 5 நாடுகள் குறித்து பார்ப்போம்.
தாய்லாந்து
தாய்லாந்தில் பிரபலமான நொறுக்கு தீனிகளாக வெட்டுக்கிளி, கரப்பான் பூச்சி வறுவல்கள் உள்ளன.
இவை நாட்டின் பாரம்பரிய விருந்து உணவிலும் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோ
மெக்ஸிகோவில் வெட்டுக்கிளி கிரேவி பாரம்பரியமான உணவாக உள்ளது.
தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அளிக்கும் முக்கிய விருந்து உணவில் இந்த வெட்டுக்கிளி கிரேவி இடம்பெற்று உள்ளது.
சீனா
சீனாவில் பட்டுப்புழு, தேள், கரப்பான் பூச்சி, ஆகிய பல பூச்சிகளை பல வகையில் சமைத்து உண்ணும் பழக்கத்தை சீன மக்கள் கொண்டுள்ளனர்.
சீனாவின் உணவு கடை வீதிகளில் பூச்சிகள் நொறுக்கு தீனிகள் நீங்காத இடம் பிடிக்கின்றனர்.
அவுஸ்திரேலியா
Witchery grubs என்னும் ஒரு வகை பூச்சி இனத்தை அவுஸ்திரேலிய நாட்டின் பழங்குடி இன மக்கள் உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
அளவில் பெரிய புழுவான இது, விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் முக்கிய உணவு வகைகளில் ஒன்றாகும்.
ஜப்பான்
சீனாவை போலவே ஜப்பானிய உணவு பட்டியலிலும் பட்டுப்புழு, மண் புழு, பியூபா உள்ளிட்ட பூச்சிகள் முக்கிய இடம் பிடித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |