உலகத்தில் ஒரு நதி கூட இல்லாத பணக்கார நாடு எது தெரியுமா?
உலகில் நதியே இல்லாத நாடு உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
பணக்கார நாடுகளில் ஒன்றன அந்நாட்டில் அதிக மழையும் பெய்வதில்லை.
அந்த நாட்டின் பெயர் சவுதி அரேபியா. அங்கு நதி ஏரி என எதுவும் இல்லை. சவுதி அரேபியா பெரும்பாலும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதி தண்ணீருக்காக செலவிடப்படுகிறது.
சவுதி அரேபியாவில் ஆறுகள் இல்லை என்றாலும், இந்த நாடு இரண்டு கடல்களால் சூழப்பட்டுள்ளது.
அதன் மேற்கில் செங்கடல் உள்ளது. மேலும் கிழக்கில் இது பாரசீக வளைகுடாவால் சூழப்பட்டுள்ளது. இந்த இரண்டு கடல்களும் சவுதி அரேபியாவிற்கு வணிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஆறுகள் இல்லாததால், சவுதி அரேபியாவில் கிணறுகள் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன.
சவுதியின் நிலத்தடி நீர் மட்டமும் உயராததால் கடல் நீரை குடிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் அந்த நாட்டில் விலை உயர்ந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |