உலகிலேயே அதிகம் அரிசி சாதம் சாப்பிடும் மக்கள் வாழும் நாடு: எது தெரியுமா?
இந்திய மக்கள் அரிசியை மிகவும் விரும்பி உண்பவர்கள்.
தென்னிந்திய மக்கள் பெரும்பாலும் மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடும் மக்கள் அதிகம் உள்ளனர்.
அந்தவகையில், அரிசி சாதம் அதிகம் உட்கொள்வதில் உலகிலேயே முதல் நாடு எது என்பது குறித்து பார்க்கலாம்.
அதிகம் அரிசி சாதம் உட்கொள்ளும் நாட்டில் முதல் இடத்தில் இருப்பது சீனா தான்.
உலகில் உற்பத்தியாவதில் 30% அரிசி சீனாவில் தான் விளைவிக்கப்படுகிறது. அதிக அரிசி சாதம் சாப்பிடும் மக்களும் சீனாவில் தான் உள்ளனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக அரிசியை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா. அதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தோனேசியா உள்ளது.
இதனைத்தொடர்ந்து, வங்கதேசம் நான்காவது இடத்திலும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த வரிசையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |