இந்தியாவை விட 9 மடங்கு தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடு எது தெரியமா?
பொதுவாகவே அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் என இரண்டு வகை இருகின்றது.
அதில் தங்கம் என்பது அசையும் சொத்தாகும். தங்கத்திற்கான மதிப்பு எப்போதும் உயர்வாக தான் இருக்கும்.
பெரும்பாலும் தங்கத்தை பெண்கள் தான் அதிகமாக வைத்திருப்பார்கள். பல நூற்றாண்டுகளாக பெண்கள் தான் தங்கத்தையும் பரிசாக பெற்று வருகின்றனர்.
இந்திய கலாச்சாரத்தின் படி தங்கத்தின் பெறுமதி மிகவும் உயர்வாகும். குறிப்பாக தங்கத்தை வைத்திருக்கும் குடும்பத்தை தான் செல்வத்தில் உயர்வான குடும்பமாக பலரும் கருதுவார்கள்.
அந்தவகையில் இந்தியாவை விட 9 மடங்கு தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடு குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவை விட 9 மடங்கு தங்கம் வைத்திருக்கும் நாடு
வாடிக்கையாளர்களின் தேவை அதிகரிப்பு, உலக அளவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்றத்தன்மை ஆகிய காரணங்களால் 2024 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 20% வரை அதிகரித்துள்ளது.
உலகளாவிய மத்திய வங்கிகள் கையிருப்பாக 37 டன் தங்கத்தை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மாதம் தங்கத்தின் கையிருப்பு 206% வரை இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
2024ம் ஆண்டில் இரண்டாம் காலாண்டில் உலக வங்கிகள் 483 மெட்ரிக் டன் தங்கத்தை வாங்கியுள்ளதாகவும், இது இந்த ஆண்டின் முதல் காலாண்டைவிட குறைவு எனவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் அதிக தங்கத்தை வைத்திருக்கும் நாடுகளில், அமெரிக்கா 8,133.46 டன் தங்கத்துடன் முதலிடத்திலும், 3,351.53 டன்னுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்திலும், 2,451.84 டன்னுடன் இத்தாலி மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன.
இதனடிப்படையில் 840.76 டன் தங்கத்துடன் இந்தியா எட்டாவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |