ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எந்த நாட்டுடையது தெரியுமா?
ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை ஜேர்மன் பாஸ்போர்ட் பெற்றுள்ளது.
அத்துடன், உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலிலும் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது ஜேர்மனி.
உண்மையில், ஜேர்மனி உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தை இரண்டு நாடுகள் பிடித்துள்ளதால், ஜேர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்பது, அந்த பாஸ்போர்ட்டுடன் எத்தனை நாடுகளுக்கு முன்கூட்டியே விசா பெறாமல் பயணிக்கலாம் என்பது போன்ற சில நெறிமுறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில், ஜேர்மன் பாஸ்போர்ட்டுடன் 190 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா பெறாமலே பயணிக்கலாம்.