உலகில் ஒரு கொசு கூட இல்லாத நாடு.., எது தெரியுமா?
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் கொசுக்கடியால் பல பாதிப்படைகின்றனர்.
கொசுக்கள் குறிப்பாக மழைக்காலங்களில் அதிகமான நோய்களை மக்களிடையே எளிதாக பரப்புகின்றன.
இது மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாக பாதித்து மலேரியா, டெங்கு போன்ற நோய்களையும் ஏற்படுத்துகிறது.
தேங்கி நிற்க்கும் தண்ணீர், சுகாதாரமின்மை போன்றவற்றால் இந்தியா போன்ற அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கொசுக்கள் அதிகளவில் இருக்கும்.
அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளிலும் கொசுவின் தொந்தரவு அதிக அளவில் இருந்துதான் வருகிறது.
அந்தவகையில், கொசுவே இல்லாத நாடுகளும் உலகில் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
அதன்படி, கொசுவே இல்லாத நாடாக ஐஸ்லாந்து இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் விஞ்ஞானிகளும் திணறி வருகின்றனர்.
இருப்பினும் ஐஸ்லாந்தில் உள்ள குறிப்பிட்ட காலநிலை கொசுக்களை வளர விடாமல் செய்வதாக கூறப்படுகிறது.
மேலும், அங்குள்ள மண் மற்றும் தண்ணீரில் உள்ள தாதுக்கள் கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |