பூமியின் மையத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?
பூமியின் மையத்தில் எந்த நாடு இருகிறது என்பது தெரியுமா? பூமி 360 டிகிரி சுழலும். மற்றும் பூமி கோளமாக இருப்பதால், நீங்கள் பூமியின் மையத்தை அடையாளம் காணலாம்.
அந்தவகையில் பூமியின் மையப்பகுதியில் எந்த நாடு அமைந்திருகிறது என்பது பற்றி ஒரு நாளாவது யோசித்து பார்த்து இருகின்றீர்களா?
இல்லை என்றால், அது பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பூமியின் மையத்தில் இருக்கும் நாடு
பூமியின் மையத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. அதற்கு அருகில் கானா தகோராடி எனும் நகரம் உள்ளது. கானா ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆப்ரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
இதனடிப்படையில் பூமியின் மையத்தில் கானா நாடு 380 மைல் தொலைவில் உள்ளது. இந்த நாட்டில் வளிமண்டலம் முற்றிலும் வேறுபட்டதாக காணப்படும்.
மற்றைய நாடுகளை விட இங்கு அதிக வெப்பம் இருக்கும். மே, ஜூன் ஆகிய மாதங்களில் அதிக வெப்பம் நிலவுவதால், வெளியில் கூட செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இந்த நாட்டில் தங்கச் சுரங்கங்கள் அதிகமாக இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்காக போர்ச்சுகீசியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே பல போர்கள் நடந்ததாகவும் வரலாறு உண்டு.
இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்குமாம். கானா மனிதனால் உருவாக்கப்பட்ட வோல்டா ஏரியின் தாயகமாகும்.
இந்த ஏரி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரியாகும். உலகின் 4 ஆவது மிகப்பெரிய ஏரியாகும். நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்த ஏரி முதன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். மேற்கு ஆப்ரிக்காவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை நாடாக இந்நாடு கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |