மாத சம்பளத்தை அள்ளிக் கொடுக்கும் நாடு எது தெரியுமா?
பொதுவாகவே ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைப்பதற்கான காரணம் பணத்திற்காக மட்டும்.
இவ்வுலகமானது பணம் இல்லாமல் எதையும் செய்ய இயலாது போன்ற நிலைமைக்கு சென்று விட்டது.
தொழிலாளி முதல் அதிகாரி வரை அனைவருமே நல்ல சம்பளத்தை விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் எதிர்பார்த்த சம்பளம் கிடைப்பதில்லை.
அதிலும் வளைகுடா நாடுகளில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாக சம்பளம் தரும் வேலைகள் இருக்கின்றன. அதற்காக பலரும் தன் குடும்பத்தை விட்டு அந்நாட்டுக்கு சென்று வேலை செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஏராளமானோர் வேலைக்காக துபாய் செல்கின்றனர். அங்கு செல்வதற்கான காரணமும் கிடைக்கும் சம்பளம் பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
அதிக சம்பளம் வழங்கும் நாடு
ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல பகுதியில் இருந்து பலரும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்கின்றனர்.
அதில் சவூதி அரேபியா வேலைவாய்ப்பு மற்றும் சம்பளத்திற்கு பிரபலமான நாடுகளாக உள்ளன. ஒருவர் வேலைக்காக துபாய் சென்று 2-5 வருடங்களில் நல்ல பணத்துடன் திரும்பி வருவார்கள்.
துபாயில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் 2000 திர்ஹாம்கள் ஆகும். இந்திய மதிப்பில் 45,000 ரூபாய் வரை இருக்கும் என உ லகின் முன்னணி ஆட்சேர்ப்பு நிறுவனமான Glassdoor கூறியுள்ளது.
WageCenter இணையதள அறிக்கையின்படி 2023 இல் சவுதி அரேபியாவில் குறைந்தபட்ச சம்பளம் 600-3000 திர்ஹாம்கள். இந்திய மதிப்பில் ரூ.13,000 முதல் 68,000 ரூபாய் வரை.
ஒவ்வொரு ஊதியமும் அவர்களின் வேலையை பொருத்தும் நிறுவனத்தின் தகுதியை பொருத்தும் வழங்கப்படும்.
ஒரு ஹோட்டலில் வெயிட்டராக வேலை செய்தால் மாதம் 10,070 திர்ஹம் அல்லது 2 ,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
பல் மருத்துவராக இருந்தால் மாதத்திற்கு 39,120 திர்ஹம்கள் வரை சம்பாதிக்கலாம். இந்திய மதிப்பில் 8 ,00,000 ரூபாய்க்கு மேலாகும்.
சர்வதேச மனித வள அமைப்பின் மதிப்பீட்டின்படி 2023 ஆம் ஆண்டில் துபாயின் சராசரி சம்பளம் 16,500 திர்ஹாம்களாக இருக்கும். அதாவது இந்திய மதிப்பில் 3,74,000 ரூபாய் ஆகும்.
சம்பளம் இவ்வளவு கிடைக்கிறது என்று பலரும் சந்தோஷப்படுவதுண்டு. ஆனால் வேலையில் எப்படி சேரலாம் என்பதற்கான கேள்வி அதிகம்.
எந்தவொரு நாட்டிலும் ஒரு நிறுவனத்திற்கு சென்று பணிப்புரிய வேண்டுமென்றால் கட்டாயம் விசா தேவை.
அதற்கு நீங்கள் முதலில் துபாயில் உள்ள நிறுவனத்தில் ஆன்லைன் அல்லது ஏதேனும் ஆட்சேர்ப்பு நிறுவனம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு முன் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பல மோசடி கும்பல் துபாயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்து வருகின்றனர்.
எனவே சரியான ஆன்லைன் ஆட்சேர்ப்பு போர்டல் அல்லது ஏஜென்சி மூலம் வேலைக்கு முயற்சிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |