உலகிலேயே அதிக கல்வி அறிவு உள்ள நாடு; முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?
அதிக கல்வியறிவு பெற்ற ஒரு நாட்டை தேர்ந்தெடுப்பது என்பது ஓர் கடினமான விடயமாகும். கல்வியறிவு விகிதம், கல்வித் தகுதி நிலைகள், உயர்கல்வியில் சேருதல், கல்வியில் முதலீடுகள் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்து காணப்படுகிறது.
ஆனால் அதிகம் படித்தவர்கள் இருக்கும் நாடு எது என்று கேட்டால் அனைவரும் கூறுவது, அமெரிக்கா, இங்கிலாந்து என்பதாகும்.
அது முற்றிலும் தவறு. பல நாடுகள் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி கல்வி அறிவில் முன்னிலையில் இருக்கிறது.
2022 இல் பின்லாந்து, தென் கொரியா, கனடா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் கல்விப் பெறுபேறுகளின் அடிப்படையில் பெரும்பாலும் முதலிடத்தில் இருந்தன.
தற்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி எந்தெந்த நாடுகள் முதலிடத்திலும் அடுத்தடுத்து எந்த நாடுகள் இருக்கின்றன என்பது பற்றியும் பார்க்கலாம்.
1. கனடா
அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாட்டில் கனடா முதலிடத்தில் இருக்கிறது. கனடாவில் 59.96% படித்தவர்கள் காணப்படுகிறார்கள்.
2. ஜப்பான்
அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாட்டில் ஜப்பான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஜப்பானில் 52.68% படித்தவர்கள் காணப்படுகிறார்கள்.
3. லக்சம்பர்க்
அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாட்டில் லக்சம்பர்க் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
4. தென் கொரியா
அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாட்டில் தென் கொரியா நான்காம் இடத்தில் இருக்கிறது.
5. இஸ்ரேல்
அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாட்டில் இஸ்ரேல் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.
6&8. அமெரிக்க மற்றும் பிரிட்டன்
அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாட்டில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆறாம் மற்றும் எட்டாம் இடத்தை பெற்றுள்ளது.
மேலும் கல்வி அறிவு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலின் முதல் 10 இடத்தில் இந்தியா இடம்பெறவில்லை.
காரணம், இந்தியாவில் கல்வி அறிவு மிகவும் குறைவாக காணப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி அல்லது பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |