தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது தெரியுமா?
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது என்பதையும், அதனை பற்றிய தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.
எந்த உயிரினம்?
ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. சுமார் 8 மணி நேரங்கள் தூங்கினால் மட்டுமே காலையில் எழுந்து சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
மனிதர்களைப் போலவே, விலங்குகள் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கையிலும் தூக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால், இங்கு ஒரு உயிரினம் ஒன்று சுமார் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தூங்குகிறது.
இதன் பின்னால் இருக்கும் காரணத்தையும், பலருக்கும் தெரியாத உண்மையை பற்றியும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
கடல் நத்தை (sea snail) என்று அழைக்கப்படும் உயிரினமானது அமைதியான மற்றும் மெதுவான இயக்கங்களுக்கு பெயர் பெற்றவை. இவை சுமார் 3 ஆண்டுகள் தொடர்ந்து தூங்க கூடியவை.
அதாவது, சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவு பற்றாக்குறை, அதிக வெப்பம் காரணமாக தங்களை காத்துக் கொள்ள நீண்ட கால உறக்க நிலைக்கு செல்கின்றன.
இந்த மாதிரியான காலத்தில் அவற்றின் உடல் செயல்பாடு நின்றுவிடும், முற்றிலும் தூக்க நிலைக்கு சென்று விடும். இந்த உறக்கநிலை காலமானது வாரங்கள் அல்லது மாதங்கள் வரை நீடிக்கும். சில நேரங்களில் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும்.
இதற்கு காரணம் என்னவென்றால், நீண்ட தூக்கம் அவற்றின் மூளை, ஆற்றல் மற்றும் செரிமான அமைப்பை பாதுகாக்கிறது. மேலும், இந்த உறக்க நிலை இவற்றின் ஒரு தனித்துவமான பாதுகாப்பு என்று கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |