தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள மாவட்டம்.., எது தெரியுமா?
2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதான கட்சிகளுக்கு இடையே கூட்டணி சிக்கல்கள் இருந்தாலும், அரசியல்வாதிகளும் பொதுமக்களும் தேர்தலை ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளனர்.
இந்த தேர்தலில் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த செயல்முறையில் சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பல மாவட்டங்களிலும் தொகுதிகளிலும் வாக்காளர் எண்ணிக்கை மாற்றம் ஏற்பட்டு, பிப்ரவரி 28, 2026 அன்று, தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அதில், ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி, பெண் வாக்காளர்கள் 2.89 கோடி மற்றும் மூன்றாம் பாலினம் 7,617 ஆகும்.
அதேபோல், 18- 19 வயதுக்குட்பட்ட 12.51 லட்சம் இளம் வாக்காளர்கள் மற்றும் 4.63 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3.99 லட்சம் 85 வயதுக்கு மேற்பட்டோர் உள்ளனர்.
சிறப்பு திருத்தப் பணியின் போது இரட்டைப் பதிவு, இறந்தோர், இடம்பெயர்ந்தோர் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

அந்தவகையில், மாவட்ட வாரியாக பார்க்கும்போது, திருவள்ளூர் மாவட்டம் அதிக வாக்காளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்த மாவட்டத்தில் மொத்தம் 31,57,413 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 15,44,710 ஆண்கள், 16,12,090 பெண்கள் மற்றும் 613 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.
திருவள்ளூரில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் என மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |