தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கும் மாவட்டம்.., எது தெரியுமா?
தமிழகத்தில் தற்போது மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன.
இதில் சென்னை, மாநிலத்தின் தலைநகராகவும், மிகச் சிறிய பரப்பளவு கொண்ட மாவட்டமாகவும் உள்ளது.
அந்தவகையில், தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கும் மாவட்டம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
பொதுவாக சென்ட்ராய்டு ஒரு பகுதியின் சராசரி மையப்பகுதியைக் குறிக்கும் கணிதக் கருத்தாகும்.
அதன்படி, தமிழகத்தின் புவியியல் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில், திருச்சி மாநிலம் மையப்பகுதியாக கருதப்படுகிறது.
இது காவிரி ஆற்றங்கரையில் அமைந்து, வடக்கே சேலம், தெற்கே மதுரை என தமிழகத்தின் மற்ற பகுதிகளுடன் மிகச்சிறந்த சாலை மற்றும் ரயில் இணைப்பைக் கொண்டுள்ளது.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில், புவியியல் ரீதியாக மையத்தில் இருப்பதால் திருச்சி மாவட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், திருச்சி மாவட்டம் சங்க காலத்தில் இருந்தே சோழர்களின் ஆட்சியில் முக்கிய நகரமாக விளங்கியது.
பல ஆய்வுகளின்படி தமிழகத்தின் சென்ட்ராய்டு, திருச்சி அருகே குறிப்பாக குளித்தலை பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
திருச்சி மையப்பகுதியில் இருப்பதால், வடக்கு–தெற்கு மாவட்டங்களுக்கு சமமான அணுகல் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இங்கிருந்து தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சுமார் 6-8 மணி நேரத்தில் சென்று வர ஏதுவாக இருக்கிறது.
மேலும், திருச்சியில் விமான நிலையம், ரயில்வே இணைப்பு, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்கனவே உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |