தமிழகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் மாவட்டம்.., எது தெரியுமா?
தமிழ்நாடு பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
1956ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. நிர்வாக வசதிக்காக தற்போது அவை 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், தமிழகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் மாவட்டம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
தென் தமிழகத்தின் முக்கிய துறைமுக நகரமாகவும், கடல்வழி வர்த்தக மையமாகவும் திகழ்வதால், தூத்துக்குடி தமிழகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது.
மேலும், தூத்துக்குடி முத்து நகரம், உப்பு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கும் உப்பு ஆசிய கண்டத்திலே மிக சிறந்த உப்பாகும்.
தமிழகத்தின் 10வது மாநகராட்சியான தூத்துக்குடி மாவட்டம் ஒரு துறைமுக நகரத்தை சேர்ந்ததாகும்.
தூத்துக்குடியில் மெக்ரூன் எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது. அங்கு பேக்கரிகள் அதிகளவு காணப்படுகிறது.
புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது.
தூத்துக்குடியில் உள்ள பரதவர்கள் அங்குள்ள கடலில் ஆண்டுக்கு ஒருமுறை முத்துக்குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
கடல்சார் துறைமுகமாக தூத்துக்குடி உருவானது பயணிகளையும், சாகசங்களையும், இறுதியில் காலனித்துவவாதிகளையும் ஈர்த்தது.
மேலும், வாணிப ரீதியாக கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் தொழில்களுக்குப் பெயர் பெற்ற முக்கிய துறைமுக நகரமாகவும் திகழ்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |