தமிழ் சினிமாவில் மிக நீளமான பெயரை கொண்ட படம்: எது தெரியுமா?
படத்திற்கு கதை எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ, அதே அளவு படத்தின் தலைப்பும் மிகவும் முக்கியமான ஒன்று.
தலைப்புதான் பார்வையாளர்களை ஈர்க்கும் முதல் விஷயம் என்பதால் படத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனத்தை செலுத்துவது வழக்கமான ஒன்று.
தற்போது பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், ஒற்றை எழுத்து, ஆங்கில வார்த்தை என படத்தின் தலைப்புக்கான நெறிகள் மாறிவிட்டது.
அந்தவகையில், தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக நீளமான பெயரை கொண்ட படம் ஒன்று உள்ளது.
அது 1993ம் ஆண்டு மன்சூர் அலி கான் ஹீரோவாகவும் நந்தினி ஹீரோயினாகவும் நடித்த படம் அது.
அந்த படத்தில் நெப்போலியன் மற்றும் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தங்கர் பச்சன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
பாலு ஆனந்த் இயக்கிய இந்த படத்தின் டைட்டில் மொத்தம் 52 எழுத்துக்களை கொண்டது.
அந்த படத்தின் பெயர் “ராஜாதி ராஜ ராஜா குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்".
இந்த படத்தின் நீண்ட தலைப்பு பலரின் கவனத்தை பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |