உலகில் எந்த உணவு அதிகம் திருடப்படுகிறது தெரியுமா?
உலகிலேயே அதிகமாக திருடப்படும் உணவு குறித்த தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உணவு திருட்டா?
திருட்டு என்றால் முதலில் நமது நினைவிற்கு வருவது பணம், நகை, வாகனங்கள் இவைகள் தான். இதனை தான் மனிதர்கள் திருடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் உணவில் கூட திருட்டு நடப்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் உணவுகள் கூட திருடப்படுகின்றது என்ற தகவல் நம்மை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் திருடப்படும் உணவு என்றால் நாம் சாக்லேட், இறைச்சி என்று தான் நினைப்போம்.

இவற்றிற்கு மேலாக உலகிலேயே அதிகமாக திருடப்படும் உணவு பட்டியலில் முதல் இடத்தை சீஸ் பெற்றுள்ளது.
இன்டர்நேஷனல் ஸ்டேடிஸ்டிக்ஸ் அண்டு ரிப்போர்ட்ஸ் ரிசெர்ச் இன்ஸ்டிடியூஷன் (International Statistics and Report Research Institutions) நடத்திய ஆய்வு அறிக்கையின்படி, உலகில் அதிகம் திருடப்படும் உணவுப்பொருளில் முதலிடத்தினை சீஸ் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சீஸ் திருடப்படுவதற்கு காரணம் என்ன?
மேலும் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் சீஸில் 4 சதவீதம் திருடப்படுவதாகவும், உலகில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் பெறப்பட்ட தரவுகளிலிருந்து இஐவை வெளியிடப்பட்டுள்ளது.
இவை World Cheese Awards நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இவை பெரும் பேச்சுப்பொருளாகவும் மாறியுள்ளது.
இவ்வாறு திருடப்படுவதற்கு காரணம் என்னவெனில், சீஸின் விலை அதிகமாக உள்ளதாகவும், மேலும் இவற்றினை திருடி எளிதில் மறைத்து வைக்க முடியும்...

அதுமட்டுமின்றி உலக அளவில் மக்கள் அதிகம் விரும்பும் உணவுகளில் சீஸ் இருப்பதன் காரணமாகவும், மறுவிற்பனையின் போது இதனை அதிக லாபத்துடன் விற்க முடியும் என்பதை காரணமாக கூறுகின்றனர்.
செடார், பார்மேசன் மற்றும் வேறு சில சிறப்பு சீஸ் வகைகளும் அதிகமாக திருடுவதற்கு குறிவைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
அதிலும் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் சீஸ் திருட்டு அதிகமாக நடைபெறுகின்றதாம். ஏனெனில் இங்குள்ள மக்கள் அதிகளவில் சீஸை உணவுகளில் பயன்படுத்துகின்றனர்.

சீஸைத் தொடர்ந்து சாக்லேட், இறைச்சி, குழந்தைகள் உணவு, காஃபி இவைகள் அதிகம் திருடப்படும் உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாம்.
இவ்வாறாக திருட்டு செயலினால் வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு பல மில்லியன் கணக்கான டொலர்கள் நஷ்டம் ஏற்படுவதாக அறிக்கையில் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |