French Visa: எந்த பிரெஞ்சு விசாவை எளிதாகப் பெறலாம்?
பொதுவாக பிரெஞ்சு விசா பெறுவது கடினமான விடயம். என்றாலும், சில வகை விசாக்களை சற்று எளிதாகப் பெறமுடியும்.
அத்துடன், விசா பெறுவதற்கான கட்டணம் 99 யூரோக்கள் மட்டுமே. சில விசாக்கள் இலவசமாகவும் கிடைக்கும்.
எந்தெந்த பிரெஞ்சு விசாக்களை எளிதாகப் பெறலாம்?
Visitor visa
Visitor விசாவைப் பொருத்தவரை, அது உங்கள் நிதி நிலைமை சார்ந்தது. அதாவது, நீங்கள் பிரான்சில் தங்கியிருக்கும் காலகட்டத்தில், உங்கள் தேவைகளை சந்திக்க உங்களிடம் போதுமான பணம் உள்ளது என்பதை நிரூபித்தாலே நீங்கள் இந்த விசா பெறமுடியும்.
Student visa
இது பிரான்சில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான விசா. பிரான்சிலுள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் உங்களுக்கு இடம் கிடைத்தபின் நீங்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாணவர் விசாதான் பிரான்சில் மிக எளிதாகப் பெறக்கூடிய விசா ஆகும்.
Entrepreneur visa
இந்த விசாவை, பிரான்சில் சொந்தத் தொழில் செய்பவர், ஃப்ரீலான்சர், ஒப்பந்ததாரர், ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் பெறமுடியும்.
விடயம் என்னவென்றால், இதற்காக அதிக ஆவணங்களை நிரப்பவேண்டியிருக்கும்.
Salarié visa
இது, பிரான்சில் பணி வழங்கும் ஒருவரிடம் பணி செய்பவர்களுக்கான விசா.
ஏற்கனவே பிரெஞ்சு நிறுவனம் அல்லது சர்வதேச நிறுவனம் ஒன்றில் உங்களுக்கு வேலை கிடைத்திருக்கும் நிலையில் நீங்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விசா பெறுவதில், உங்களுக்கு பணி வழங்கும் நிறுவனமும் உங்களுக்கு உதவவேண்டியிருக்கும்.
Vie privée
இந்த விசா பொதுவாக, கணவன் அல்லது மனைவி விசா 'spouse visa' என அழைக்கப்படுகிறது.
ஒருவருடைய கணவர் அல்லது மனைவி பிரான்ஸ் நாட்டவராக இருக்கும் நிலையில், அவர் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதே நேரத்தில், பிரான்சில் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்களும் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |