பெட்ரோல், டீசல் இல்லை.., கப்பல்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் என்ன தெரியுமா?
which fuel is used in ships- உலகம் முழுவதும் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல் அல்லது டீசல் மூலம் இயக்கப்படுகின்றன.
ஆனால் பெரிய கப்பல்களை இயக்குவதற்கு கடல்சார் பயன்பாட்டுக்கான வேறு சில எரிபொருட்களை பயன்படுத்தப்படுகின்றன.
சரக்கு கப்பல்கள், எண்ணெய் டேங்கர்கள் மற்றும் கண்டெய்னர் கப்பல்கள் அதிக அளவிலான சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கின்றன.

இதற்காக பெரிய கடல்சார் இயந்திரங்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், பெரிய கப்பல்களில் பொதுவாக பங்கர் எரிபொருள் எனப்படும் Heavy Fuel Oil (HFO) பயன்படுத்தப்படுகிறது.
இது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின்போது கிடைக்கும் அடர்த்தியான மற்றும் பிசுபிசுப்பான எண்ணெயாகும்.

HFO குறைந்த விலை மற்றும் அதிக ஆற்றல் கொண்டதாக இருப்பதால், நீண்ட தூர கடல் பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.
பெரிய கப்பல்களில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த இயந்திரங்கள், இந்த வகை கனரக எரிபொருளை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
HFO மட்டுமின்றி, கப்பல்களின் அளவு, பயணிக்கும் வழித்தடம் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பொறுத்து வேறு சில எரிபொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றுவதற்காக பல கப்பல்கள் தற்போது Very Low Sulfur Fuel Oil (VLSFO) எரிபொருளை பயன்படுத்துகின்றன.
கப்பல்களில் இருந்து வெளியாகும் கந்தக மாசுபாட்டை கட்டுப்படுத்த சர்வதேச விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, VLSFO பயன்பாடு அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |