இந்தியாவிலேயே அதிக அசைவ உணவு உண்ணும் மக்கள் வாழும் பகுதி எது தெரியுமா?
பொதுவாகவே இவ்வுலகில் இருக்கும் மக்கள் அதிகமாக அசைவ உணவை தான அதிகமாக விரும்பி எடுத்துக்கொள்கிறார்கள்.
அதிலும் இறைச்சி மற்றும் மீன் வகை என்றால் சொல்லவா வேண்டும்? அதிகமாக உண்வார்கள். மீன், இறைச்சிகள் போன்றவற்றை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் இருப்பதாக நடத்தப்பட்ட ஒர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்தவகையில் எந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் அதிகமாக அசைவ உணவை விரும்பி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
அதிக அசைவ உணவு உண்ணும் மக்கள் வாழும் பகுதி
இந்தியாவில் சுமார் 85 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவை விரும்பி சாப்பிடுவதாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக அசைவ உணவு உண்ணும் மாநிலமாக நாகாலாந்து காணப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்கள் சுமார் 99.8 சதவீதம் பேர் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இரண்டாவது இடத்தில் மேற்கு வங்கமும் அங்கு வசிக்கும் மக்களில் 99.3 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.
மூன்றாவது இடத்தில் கேரளா உள்ளது. இங்குள்ள மக்களில் 99.1 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.
நான்காவது இடத்தில் தெலுங்கு மாநிலமான ஆந்திரா இருக்கிறது. இங்குள்ள மக்களில் 98.25 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுகின்றனர்.
ஆறாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இங்குள்ள மக்களில் 97.65 சதவீதம் பேர் அசைவத்தை விடும்பி சாப்பிடுகிறார்கள்.
அதிலும் தமிழகத்தில் உள்ள மக்கள் சிக்கன் பிரியாணியை அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள்.
ஏழாவது இடத்தில் ஒடிசா மாநிலம் உள்ளது. இங்குள்ள மக்களில் சுமார் 97.35 சதவீத மக்கள் அசைவத்தை விரும்பி சாப்பிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |