பிரியாணியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் இந்திய நகரம்.., எது தெரியுமா?
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், மக்களின் மிகவும் பிடித்த உணவாக பிரியாணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
இது ஒரு சாதாரண உணவு அல்லாமல், பலருக்கு உணர்வுடன் இணைந்த உணவாக மாறியுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு வகையான பிரியாணிகள் இருக்கிறது.
பிரியாணி பாரசீக சமையலிலிருந்து தோன்றி, முகலாயர்களால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர், உள்ளூர் மசாலா மற்றும் சமையல் முறைகளுடன் இணைந்து பல பிராந்திய வகைகளாக வளர்ச்சி பெற்றது.
இந்தியாவின் பிரியாணி தலைநகரம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஹைதராபாத் நகரம் பிரியாணி தலைநகரம் என அழைக்கப்படுகிறது.
அங்கு தயாரிக்கப்படும் ஹைதராபாதி பிரியாணி, அதன் நறுமணம், மசாலா கலவை மற்றும் சுவைக்காக உலகப் புகழ் பெற்றது.
ஹைதராபாத் பிரியாணியின் சிறப்பு தம் சமையல் முறையாகும்.
இதில் அரிசி மற்றும் இறைச்சி மூடிய பாத்திரத்தில் ஒன்றாக வேகவைக்கப்படுவதால், சுவை மற்றும் நறுமணம் அதிகரிக்கிறது.
மேலும், மலபார், லக்னோ, கொல்கத்தா, ஆம்பூர் மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் தனித்துவமான பிரியாணி வகைகள் உள்ளன.
இதற்கிடையில், ஹைதராபாதி பிரியாணி இந்தியா முழுவதும், அதன் தனிச்சுவையாலும், நாட்டின் மிகவும் பிரபலமான பிரியாணியாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |