உலகிலேயே சிறந்த அரிசியாக அறிவிக்கப்பட்ட இந்திய அரிசி: எது தெரியுமா?
இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரிசி வகைக்கு உலகிலேயே சிறந்த அரிசி என்ற பட்டம் கிடைத்துள்ளது.
டேஸ்ட் அட்லஸ் இந்தியாவின் ஒரு அரிசி வகையை 2023-24ல் இந்தியாவிலேயே சிறந்த அரிசி என்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான பாஸ்மதி அரிசியை தான் உலகின் சிறந்த அரிசியாக டேஸ்ட் அட்லஸ் குறிப்பிட்டுள்ளது.
சாதாரணமான அரிசியை போல் இல்லாமல், இந்த பாஸ்மதி அரிசி தோற்றத்திலும் சற்று வித்தியாசமானதே.
இந்த மெல்லிய நீண்ட பாஸ்மதி அரிசிகள் அதன் சுவைக்கு மட்டுமன்றி வாசனைக்கும் பெயர் போனது.
இந்தியாவில் சுமார் 34 வகையான அரிசிகள் பயிரிடப்படுகின்றன.
இதில் பாஸ்மதி 217, பாஸ்மதி 370, டேராடூன் பாஸ்மதி அரிசி, பஞ்சாப் பாஸ்மதி, பூசா பாஸ்மதி, கஸ்தூரி பாஸ்மதி, ஹரியானா பாஸ்மதி, மஹி சுகந்தா, தாரோரி பாஸ்மதி, ரன்பீர் பாஸ்மதி ஆகியவை மிகவும் பிரபலமானவை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |