குழந்தை பிறப்பு குறைந்துவரும் இந்திய மாநிலம் எது தெரியுமா?
இந்திய மாநிலம் ஒன்றில் குழந்தைகளின் பிறப்பு குறைந்து வருகிறது. அது எந்த மாநிலம் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த மாநிலம்?
சமீப காலமாகவே தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளில் மக்கள்தொகை குறைந்து வருவது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
அந்தவகையில், இந்தியாவில் சிறந்த சுகாதார மற்றும் கல்வி நிலைமைகளைக் கொண்டுள்ள மாநிலம் ஒன்றில் குழந்தைகளின் பிறப்பு குறைந்து வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் தனிநபர் வருமானம் என வளர்ந்த மாநிலமாக இருக்கும் கேரளாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
2024-ம் ஆண்டில் கேரளாவில் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 3.6 கோடி ஆகும். இதற்கு முன்னதாக 1991-ம் ஆண்டில் மக்கள் தொகை 2.90 கோடியாக இருந்தது. இந்த மாநிலத்தின் மக்கட்தொகை கடந்த 35 ஆண்டுகளில் 70 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கேரளாவில் மக்கட்தொகை மிகவும் குறைந்து வருகிறது. கேரளாவில், ஆண்டுக்கு 5 முதல் 5.5 லட்சம் குழந்தைகள் பிறந்தன. ஆனால், 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,93,231 ஆக குறைந்துள்ளது.
மேலும், 2021 -ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில், கேரளாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4,19,767 ஆக குறைந்துள்ளது.
ஆய்வின் படி, மக்கள்தொகையின் நிலையை பராமரிக்க, 2.1 இன் கருவுறுதல் விகிதம் தேவை. அதாவது ஒருவருக்கு 2.1 குழந்தைகள் பிறக்க வேண்டும். இந்த இலக்கை 1987-88 -ம் ஆண்டில் எட்டியது.
இந்தியாவில் சுகாதார அமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் கேரளாவில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |