புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் இந்திய மாநிலம் எது தெரியுமா?
இந்தியாவில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் கிடைக்கும் நகரம் எது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எந்த மாநிலம்?
இந்தியாவிலேயே தொடக்க நிலை ஊழியர்கள் அதிக ஊதியம் பெறக்கூடிய மாநிலம் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளது.
பல்வேறு துறைகளில் பணிபுரிவோருக்கான ஊதியம் தொடர்பாக ஆய்வு ஒன்றை வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு தளமான இன்டீட் நிறுவனம் நடத்தியது.
இந்நிறுவனமானது, 1,311 ஊழியர்கள் மற்றும் 2, 531 பணி வழங்குபவர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் கிடைக்கும் நகரம் என்பது தெரியவந்துள்ளது.
சென்னையில், முன் அனுபவம் எதுவும் இல்லாதவர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் வரை 30,100 ரூபாயை ஊதியமாக பெருகின்றனர்.
இதனையடுத்து, ஐதராபாத்தில் இடைநிலை மற்றும் சீனியர் லெவல் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கிறது.
மேலும், மும்பை, பெங்களூரு, புனே நகரங்களை விட சென்னை, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்களில் வாழும் செலவு குறைவாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |