இந்தியாவில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டும் உள்ள மாநிலம் எது தெரியுமா?
இந்திய மாநிலம் ஒன்றில் ஒரு ஒரே ரயில் நிலையம் மட்டுமே உள்ளது.
ஒரு ரயில் நிலையம் உள்ள மாநிலம்
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், பொதுப்போக்குவரத்தில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் மூலம் பயணம் செய்கின்றனர். இந்தியாவில் 7,349 ரயில் நிலையங்கள் உள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 13,198 ரயில்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதில், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1173 ரயில் நிலையங்கள் உள்ளது. ஆனால் ஒரு மாநிலத்தில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரம்(mizoram), இந்தியாவில் ஒரே ஒரு ரயில் நிலையம் கொண்ட மாநிலம் ஆகும்.
மிசோராமின் கோலாசிப் மாவட்டத்தில் பைராபி(Bairabi) நகரில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், BHRB என்ற ரயில் நிலைய குறியீட்டை கொண்டுள்ளது.
மிசோராமின் மொத்த மக்கள் தொகை 14.10 லட்சம் என மதிப்பிடப்படும் நிலையில், இந்த ஒரு ரயில் நிலையமே மொத்த மாநிலத்திற்கும் சேவை செய்து வருகிறது.
4 ரயில் பாதைகள் மற்றும் 3 ரயில் மேடைகள் உள்ள இந்த ரயில் நிலையம் 2016 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |