சர்வதேச எல்லையில் உள்ள இந்திய மாநிலங்கள் எவை தெரியுமா?
சர்வதேச எல்லையில் இருக்கும் இந்திய மாநிலங்கள் எவை என்பதை நாம் இந்த பதிவில் பார்க்காலம்.
இந்திய மாநிலங்கள் எவை?
பஹல்காம் துயர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து, பல இந்திய எல்லையோர மாநிலங்கள் மீது ஏவுகணைகளை ஏவி இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
இந்நிலையில் சர்வதேச இலையானது வடக்கில் ஜம்மு & காஷ்மீரில் துவங்கி, குஜராத்தின் ஜிரோ பாயிண்ட் வரை நீடிக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை என்பது மொத்தம் 3,323 கி.மீ. நீளம் ஆகும்.

எங்களுக்கு ஒரே மகன், காலையில் தான் வீடியோ காலில் பேசினான்: உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் பெற்றோர் உருக்கம்
ஜம்மு & காஷ்மீர்
சர்வதேச எல்லையில் இருக்கும் மாநிலங்களில் ஜம்மு & காஷ்மீர் ஆனது 1,222 கி.மீ தூரம் பாகிஸ்தானை ஒட்டி இருக்கிறது. இது பாகிஸ்தானுடன் எல்லையை அதிக அளவு பகிர்ந்துக்கொள்ளும் யூனியன் பிரதேசமாக உள்ளது. மேலும், சீனாவுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
ராஜஸ்தான்
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலமானது எல்லையை பகிர்ந்து கொள்வதில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது 1,170 கி.மீ தூரம் பாகிஸ்தானை ஒட்டி இருக்கிறது.
குஜராத்
இந்தியாவின் மேற்கு கடற்கரையில், அரபிக் கடலில் அமைந்துள்ள குஜராத் மாநிலமானது 506 கி.மீ தூரம் பாகிஸ்தானை ஒட்டி இருக்கிறது.
பஞ்சாப்
50,362 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பஞ்சாப் மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தான் எல்லை இருக்கிறது.
லடாக்
59,000 சதுர கி.மீ. பரப்பளவை கொண்ட லடாக்கின் மேற்கில் பாகிஸ்தான் எல்லையும், கிழக்கு மற்றும் வடகிழக்கில் சீன எல்லையும் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |