இந்தியாவில் இரண்டு தலைநகரங்களை கொண்ட மாநிலங்கள்.., எது எது தெரியுமா?
இந்தியா பல்வேறு கலாச்சாரம் மற்றும் நில அமைப்புகளால் தனித்துவமான நாடாக விளங்கி வருகிறது.
இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் கொண்ட மிகப்பெரிய நாடாக இருக்கிறது.
இங்கு பெரும்பாலான மாநிலங்களுக்கு ஒரு தலைநகரம் இருந்தாலும், சில மாநிலங்கள் இரண்டு தலைநகரங்களைக் கொண்டுள்ளது.
இந்த இரண்டு தலைநகரங்களை கொண்ட மாநிலங்கள் நில அமைப்பு மற்றும் காலநிலை சவால்களை சமாளிக்க உதவுகிறது.
அந்தவகையில், இரண்டு தலைநகரங்களை கொண்ட மாநிலங்கள் எது என்பது குறித்து பார்க்கலாம்.
ஹிமாச்சலப் பிரதேசம்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா கோடைக்கால தலைநகரமாகவும், தர்மசாலா குளிர்கால தலைநகரமாகவும் செயல்படுகிறது. கடுமையான பனிப்பொழிவை சமாளிக்க இது உதவுகிறது.

மகாராஷ்டிரா
மும்பையின் முக்கிய தலைநகரமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு நாக்பூர் குளிர்கால தலைநகரமாக செயல்படுகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சம நிர்வாகம் கிடைக்க இது உதவுகிறது.

உத்தராகண்ட்
இங்கு டேராடூன் நிர்வாக தலைநகரமாகவும், பராரிசைன் கோடைக்கால தலைநகரமாகவும் உள்ளது. மலைப்பகுதி அடையாளத்தை பாதுகாக்க இந்த மாற்றம் செய்யப்பட்டது.

ஜம்மு & காஷ்மீர்
இங்கு ஸ்ரீநகர் கோடைக்காலத்திலும், ஜம்மு குளிர்காலத்திலும் தலைநகராக செயல்படுகிறது. இது தர்பார் நகர்வு என்ற பழமையான நடைமுறையின் ஒரு பகுதி.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |