இந்தியாவிலேயே பயணிகளிடம் டிக்கெட் வாங்காமல் இயங்கும் ஒரே ரயில்.., எது தெரியுமா?
இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 7349 ரயில் நிலையங்கள் உள்ளன. தினமும் சுமார் ரயிலில் 2.5 கோடி மக்கள் பயணம் செய்கின்றன.
பொதுவாக ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பது கட்டாயம். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
ஆனால் இந்தியாவில் ஒரு ரயிலில் மட்டும் பயணிகள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
அந்தவகையில், இந்தியாவில் பயணிகளிடம் டிக்கெட்டேவாங்காமல் இயங்கும் ஒரே ரயில், பக்ரா-நங்கல் ரயில் ஆகும்.
பஞ்சாபின் நங்கல் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பக்ரா பகுதிகளுக்கு இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது.
கடந்த 1948ஆம் ஆண்டு பக்ரா-நங்கல் அணையின் கட்டுமான பணிகளுக்காக இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல இந்த ரயில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் இதில் பயணம் செய்யத் தொடங்கினர்.

சுமார் 13 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரயில் வழியில் 6 நிலையங்களில் நின்று செல்லும். மேலும், 3 சுரங்கப்பாதைகள் வழியாகவும் செல்கிறது.
இந்த ரயில் சேவையை பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (BBMB) நிர்வகித்து வருகிறது.
இந்த ரயில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பையும், அணையின் கட்டுமானப் பணிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த ரயிலில் தினமும் 800க்கும் மேற்பட்டோர் பயணம் செய்வதாகக் கூறப்படுகிறது. சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரயிலில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
உள்ளூர் மக்கள் தங்களின் அன்றாடப் பயணங்களுக்கு இந்த ரயிலை பயன்படுத்துகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் பக்ரா-நங்கல் அணை மற்றும் மலைப்பகுதிகளின் அழகைக் கண்டு ரசிக்க இதில் பயணம் செய்கின்றனர்.
இந்த பக்ரா-நங்கல் ரயில், இலவசப் பயண வசதியை வழங்குவதுடன், இந்தியாவின் வரலாறு மற்றும் வளர்ச்சியின் அடையாளமாகவும் திகழ்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |